மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
18 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
18 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரியில், லோக்சபா தேர்தலையொட்டி மார்ச், 16 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன. பாப்பிரெட்டிப்பட்டி பகுதியிலுள்ள கவுண்டம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்த, அம்பேத்கர் சிலையை தவிர, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகள் துணியால் மூடப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் கடந்த ஜூன், 6ல் விலக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மீது மூடிய துணிகளை, அந்தந்த கட்சியினர் விலக்கினர். ஆனால், 25 நாட்களாகியும், பையர்நத்தத்திலிருந்த, எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகளை மூடிய துணிகளை, அ.தி.மு.க., - காங்., கட்சியினர் திறக்க ஆர்வம் காட்டவில்லை. இது குறித்த செய்தி நேற்று, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து நேற்று காலையில், அக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகளின் மேல் மூடப்பட்டிருந்த துணிகளை அகற்றி, சிலைகளை மக்கள் பார்வைக்கு விட்டனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025