உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

மாணவியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 22, இவரும், அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்த சேலத்தை சேர்ந்த, 16 வயது மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த மாணவியின் பெற்றோர், தமிழ்செல்வனை காதலிக்கக்கூடாது என கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்., 12ல் வீட்டை விட்டு மாணவி வெளியேறியுள்ளார். அதன்பின், 15ல் கொளகம்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் தமிழ்செல்வனுக்கும், மாணவிக்கும், தமிழ்செல்வனின் தந்தை மகேஷ், 47, தாய் சென்னம்மாள், 45, ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்நிலையில், மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த மாணவி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாணவி அளித்த புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் தமிழ்செல்வன், அவரது பெற்றோர் மகேஷ், சென்னம்மாள் ஆகியோர் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி