மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
9 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
10 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
10 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
10 hour(s) ago
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடங்களில், சுற்றித்திரியும் முதலைகளை -பிடிக்க, வனத்துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, சத்திரம், பிலிகுண்டுலு உள்ளிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக, தண்ணீர் இல்லாமல் வறண்டு வெறும் பாறைகள் மட்டுமே தென்படுகின்றன. காவிரி ஆற்றில் பார்வையிடும் ஐந்தருவி, முதலைப்பண்ணை, ஆலம்பாடி, சத்திரம் ஆகிய பகுதிகளில் முதலைகள் சுற்றித்திரிவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் முன், முதலை ஒன்று வந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால், இங்குள்ள முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், சுற்றுலா பயணிகள் சென்று சுற்றி பார்க்கும் இடங்களில், அச்சுறுத்தும் வகையில் உள்ள முதலைகளை வனத்துறையினர் பிடித்து, முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும்.
9 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago