தர்மபுரி, தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, பரவலாக மிதமான மழை பெய்தது.வங்க கடலில் ஏற்கனவே ஒரு தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு தாழ்வு பகுதி நவ., 22 அன்று உருவாக உள்ளதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், கடந்த சில தினங்களாக, மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில், தர்மபுரி, நல்லம்பள்ளி பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில், பரவலாக மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில், அதிகபட்சமாக பென்னாகரத்தில், 16 மி.மீ., மழை பதிவானது.அதை தொடர்ந்து, தர்மபுரி, 15, மாரண்டஹள்ளி, 7, பாலக்கோடு, 4, பாப்பிரெட்டிப்பட்டி, 5.20, நல்லம்பள்ளி, 9, மொரப்பூர், 4, ஒகேனக்கல், 4.40, அரூர், 6 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 70.60 மி.மீ., சராசரியாக, 7.80 மி.மீ., மழை பதிவானது.