| ADDED : நவ 17, 2025 03:59 AM
ஏரியூர்: ஏரியூர் அடுத்த இராமகொண்ட அள்ளி, கண்ணப்பன் நகர் சேத-மடைந்த தார்ச்சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராம-கொண்ட அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கண்ணப்பன் நகரில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த, 12 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதம-டைந்து குண்டும், குழியுமாய் காணப்படுகிறது. இதனால், அப்ப-குதியில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியோர்கள், வாகன ஓட்டிகள் என, பல்வேறு தரப்பினரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு அடிக்கடி இருசக்கர வாகன ஓட்-டிகள் கீழே விழுத்து, விபத்தில் சிக்குவது தொடர்கிறது. இதுகு-றித்து, அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்-கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாக உடன-டியாக இப்பகுதியில் புதிய தார்ச்சாலையை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.