மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
6 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
6 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
6 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
6 hour(s) ago
தேன்கனிக்கோட்டை: : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியத்திலுள்ள, சந்தனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட திருமலை நகர், திப்பசந்திரம், ஏணிமுச்சந்திரம், ஜார்கலட்டியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 250 க்கும் மேற்பட்டோருக்கு, 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், சந்தனப்பள்ளி அருகே கிரியனப்பள்ளி சாலையிலுள்ள ஏரி பகுதியில், நேற்று காலை எஸ்.குருபட்டி, தல்சூர் கிராமங்களை சேர்ந்த, 60 க்கும் மேற்பட்ட மக்கள், 100 நாள் வேலைக்காக காலை, 7:00 மணி முதல் காத்திருந்தனர். அங்கு வந்த பணி தள பொறுப்பாளர், மொபைல்போனில் ஆன்லைன் வழியாக மக்களின் வருகை பதிவேட்டை அப்டேட் செய்தார். சர்வர் பிரச்னையால் காலை, 10:30 மணி வரை, 11 பேருக்கு மட்டுமே வருகை பதிவேடு அப்டேட் செய்ய முடிந்ததால், மற்றவர்களுக்கு வேலையில்லை என அவர் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த கிராம மக்கள், 50 க்கும் மேற்பட்டோர், சந்தனப்பள்ளி பஞ்., அலுவலகத்தை நேற்று காலை, 10:30 மணிக்கு முற்றுகையிட்டு, அய்யூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கெலமங்கலம் துணை பி.டி.ஓ., முருகன், சந்தனப்பள்ளி பஞ்., செயலர் மஞ்சுநாத் மற்றும் தேன்கனிக்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் வேலை வழங்குவதாக உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago