மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
20 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
20 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
அரூர்: சித்தேரி மலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, மலைவாழ் மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலையில், அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையை அகற்ற கோரி, தமிழக முதல்வருக்கும் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், சித்தேரி கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்-பட்டது. ஏற்கனவே, மாவட்ட கலெக்டரிடமும் மனு அளிக்கப்-பட்டது. ஆனால் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்-கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 9:15 மணிக்கு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, கடை முன் மலைவாழ் மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், டி.எஸ்.பி.,ஜெகன்நாதன், டாஸ்மாக் தாசில்தார் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்-தினர். அப்போது, இரண்டு மாதத்திற்குள் கடையை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை-யடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், 11:45 மணிக்கு கலைந்து சென்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025