உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்  

ஆயுதங்களுடன் கைதுதிண்டுக்கல்: மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் மேவின், கிளின்டன், ரிச்சார்டு ஆகியோர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தனர். தெற்கு போலீசார் மூவரையும் கைது செய்தனர்.இளம்பெண் மாயம்நிலக்கோட்டை: அப்பாவுபிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் தேன்மொழி 19. பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி மனைவி மாயம்நிலக்கோட்டை: விளாம்பட்டியைச் சேர்ந்தவர் நல்ல மாயன் 40. இவரது மனைவி சந்தியா 38. 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவர் இடையே தகராறு ஏற்பட மாயமானார். விளாம்பட்டி போலீசார் சந்தியாவை தேடி வருகின்றனர். தற்கொலைநிலக்கோட்டை: அக்ரகார பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார் 35. இவருக்கும் மனைவி கார்த்திகா தேவிக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. கார்த்திகா தேவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். மனம் உடைந்த அருண்குமார் வீட்டில் துாக்கில் தொங்கி இறந்தார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். சாக்கடையில் டிரைவர் உடல் வேடசந்துார்: கெண்டையகவுண்டனுாரை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் ராஜ் 55. கரூர் ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் சாக்கடையில் இறந்து கிடந்தார். இறப்பு குறித்து வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை