உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதை பணிகள் சுறுசுறு

குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதை பணிகள் சுறுசுறு

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.ஒட்டன்சத்திரம் அருகே பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு குழந்தை வடிவில் முருகன் தரிசனம் தருகிறார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநி தைப்பூச விழாவில் பங்கேற்க பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் குழந்தை வேலப்பரை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். குழந்தைகளுக்குப் பிடித்த மிட்டாய், பிஸ்கட்டுகளை வைத்து முருகனை வழிபட்டு செல்வர்.குழந்தை வேலப்பர் மலையிலும் கோயில் உள்ளது. இந்த மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என்பது முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போது ரூ.8.64 கோடி மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மூன்று கிலோமீட்டர் துாரத்திற்கு கிரிவலப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் , பங்குனி உத்தர தீர்த்தக் காவடி எடுத்து பழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ