உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்- கொடைக்கானல் சிறப்பு பஸ்கள் இயக்கம் இ பாஸ் நடைமுறை எதிரொலி

திண்டுக்கல்- கொடைக்கானல் சிறப்பு பஸ்கள் இயக்கம் இ பாஸ் நடைமுறை எதிரொலி

திண்டுக்கல்:இ- பாஸ் நடைமுறையால் பலரும் பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டுவதால் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொடைக்கானலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பள்ளி கோடை விடுமுறை, அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் போன்றவற்றின் காரணமாக கொடைக்கானலுக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நெரிசலை தவிர்க்க மே 7 முதல் வாகனங்களில் செல்வோருக்கு இ- பாஸ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இதனால் பயணம் சிரமமின்றி அமைய அரசு பஸ்களை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ரயிலில் திண்டுக்கல் வந்து கொடைக்கானல் செல்வோரின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் விட கோரிக்கை எழுந்து வருகிறது.இதை தொடர்ந்து போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொடைக்கானலுக்கு நேரடியாக சிறப்பு பஸ் சேவை இன்று முதல் தொடங்குகிறது.மண்டல பொது மேலாளர் டேனியல் சாலமன் கூறியதாவது: பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தினமும் அதிகாலை 4:00, 5:15, காலை 6:45, 7:30 மணிக்கு நேரடியாக கொடைக்கானலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவை பட்டால் கூடுதலாக இயக்கப்படும். குறிப்பிட்ட நேரங்களில் ஸ்டேஷனுக்கு வந்தால் பஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை