உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை வன சுற்றுலா தலம் நேரம் மாற்றம்

கொடை வன சுற்றுலா தலம் நேரம் மாற்றம்

கொடைக்கானல்:கொடைக்கானல் வன சுற்றுலா தலம் திறக்கப்படும் நேரம் மாற்றிமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனச் சுற்றுலாத் தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, துாண் பாறையை காண பயணிகள் வருகின்றனர். சீசன் தருணத்தில் முன்கூட்டியே திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஒரு மணி நேரம் முன்னதாக காலை 8:00 மணிக்கு திறந்து மாலை 5:00 மணிக்கு மூடப்படுகிறது. வெளியே செல்லும் கோல்ப் மைதான நுழைவாயில் மாலை 6:00 மணிக்கு மூடப்படுகிறது. இந்நடைமுறை ஏப்.,17 லிருந்து ஜூன் 15 வரை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே நாளை நடக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மதியம் 12:00 மணிக்கு வன சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு மாலை 5:00 மணிக்கு மூடப்படும். அன்றைய தினம் பேரிஜம் ஏரி செல்ல அனுமதி இல்லை எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை