| ADDED : ஆக 02, 2024 06:32 AM
முதியவர் இறப்புதிண்டுக்கல்: நத்தம் ரோடு மாநகராட்சி பயணியர் விடுதி அருகே சில நாட்களாக 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று இறந்தார். பா.ஜ.க., நிர்வாகிகள் கைதுசாணார்பட்டி : வீரசின்னம்பட்டி சேர்ந்தவர் பா.ஜ., ஓ.பி.சி., அணி முன்னாள் துணைத் தலைவர் தனபால் 35. இவர் மாவட்ட தலைவர் தனபாலனை குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதை கண்டித்து சாணார்பட்டி ஒன்றிய பா.ஜ., தலைவர் மணிகண்டன் சமூக வலைதளங்களில் அவதுாறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசில் புகார் அளித்தனர். கஞ்சா விற்றவர் கைதுநத்தம்:குட்டுப்பட்டி பகுதியில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார்கள் ரோந்து சென்றனர்.அப்போது அங்குள்ள மயான பகுதியில் கஞ்சா விற்ற குட்டுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்தை 47, கைது செய்தனர்.திருட்டில் அண்ணன், தம்பி கைதுவேடசந்துார் :கரூர் மாவட்டம் மன்மங்கலம் கோயம்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் சோமசுந்தரம் 46. வேடசந்துார் ஆத்து மேட்டில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது லாரியிலிருந்து 2 இளைஞர்கள் இறங்கி ஓடினர். இதைக் கண்ட சோமசுந்தரம் கூச்சலிட்டார். பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திண்டுக்கல் பேகம்பூர் அந்தோணியார் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் 20, இவரது தம்பி 17 வயது சிறுவன் என்பது தெரிய , எஸ்.ஐ., இருவரையும் கைது செய்தனர்.