உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலை பணியாளர்கள் கூட்டம்

சாலை பணியாளர்கள் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டம் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் சாலை ஆய்வாளர் சங்க அலுவலகத்தில் 25 வது ஆண்டு வெள்ளி ஆண்டு,9வது கோட்டப்பேரவை கூட்டம் நடந்தது. தலைவர் ராஜா, இணைச்செயலாளர் முருகானந்தம், கோட்ட துணைத் தலைவர் அழகர்சாமி, முருகேசன், துணைத்தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் முருகேசன், தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் தமிழ், பொதுச்செயலாளர் அம்சராஜ் பேசினர்.வெங்கடாச்சலம் நன்றி கூறினார். 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி