உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாளை சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்

நாளை சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்

திண்டுக்கல் : மலைக்கோட்டை லயன்ஸ் சங்கம் சார்பில், ஊழலற்ற பசுமை இந்தியாவை வலியுறுத்தி, சுதந்திர தின மினி மாரத்தான் ஓட்டம், திண்டுக்கல்லில் நடக்கிறது. லயன்ஸ் சங்க தலைவர் சந்திரமோகன் கூறியது: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக, மினி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. நாளை மாலை 3.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. நத்தம் ரோடு குடகனாறு இல்லத்தில் துவங்கி மேம்பாலம், ரவுண்டானா, மணிக்கூண்டு, செயின்ட் மேரீஸ் பள்ளி வழி, மொத்தம் 3.5 கி.மீ., தூரம் சென்று டட்லி பள்ளியை அடைகிறது. இதில் 5000 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு பெறுகின்றனர். இரண்டாம் நிகழ்ச்சியாக ஆறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடக்கிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 15, காலை 10 மணிக்கு புதையல் வேட்டை போட்டி நடக்கிறது, என்றார். செயலாளர் நசுருதீன், பொருளாளர் முருகானந்தம் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை