உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்கள் தொகை விழிப்புணர்வு விழா

மக்கள் தொகை விழிப்புணர்வு விழா

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை நாள் இருவார விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கவிதை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, கலெக்டர் ஆனந்தகுமார் பேசியதாவது: உலகில் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதை, மேலைநாடுகள் 'வளர்ச்சி' என்கின்றனு. பொருளாதார நிபுணர்கள், 'வீக்கம்' என்கின்றனர். ரஷ்யா போன்ற பல நாடுகள் கட்டாயமாக மக்கள் தொகையை உயர்த்த முயற்சிக்கின்றன. மக்கள் தொகை குறைவாக இருக்கும்போது, தரமான மனித சேவை வழங்குவது எளிதாகும். நாம் சுதந்திரம் அடைந்தபோது, நம்மால் இவ்வளவு பெரிய நாட்டை காக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இன்று ஐரோப்பா, வடஅமெரிக்கா என வளர்ச்சி அடைந்த பகுதிகளை விட, ஆசியாவில் அதிக பணக்காரர்கள் உள்ளோம் எனக் கூறுவதில் பெருமையடையலாம். இந்தியாவில் வளர்ச்சி அடைந்த, முன்னேறிய மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது, நம் நாட்டுக்கு செய்யும் சேவையாகும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆட்டோக்களில், மக்கள் தொகை விழிப்புணர்வு வாசகம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. துணை இயக்குனர் (மருத்துவம்) செங்கோட்டையன் வரவேற்றார். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் இளங்கோ பேசினார். வேளாளார் மகளிர் கல்லூரி முதல்வர் சுசீலா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ