உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரிச்சேரி கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

ஒரிச்சேரி கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

அந்தியூர்,: குடியரசு தினத்தை ஒட்டி, பஞ்சாயத்துகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதன்படி ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரி பஞ்., கூட்டம், தலைவர் சித்ரா தலைமையில், சின்னாநாயக்கனுாரில் நடந்தது.'பவானி ஆற்றில் இருந்து முறையாக சுத்தகரிப்பு செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நுாறு நாள் வேலை திட்டத்தில் பல மாதமாக சம்பள பாக்கி உள்ளது. பஞ்சாயத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை செயல்படுத்துவதில்லை' என்று, மக்கள் சரமாரி குற்றம் சாட்டினர். இதற்கு தலைவர் சித்ரா, 'உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என்று கூறினாலும், அவரை முற்றுகையிட்டனர். இதனால் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., சின்னுசாமி தலைமையில் சென்ற போலீசார் மக்களை சமாதானம் செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ