உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுதந்திர தின அணிவகுப்பு கலை நிகழ்ச்சி ஒத்திகை

சுதந்திர தின அணிவகுப்பு கலை நிகழ்ச்சி ஒத்திகை

ஈரோடு: ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயதப்படை வளாகத்தில், சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை, கலை நிகழ்ச்சி ஒத்திகை நேற்று நடந்தது. நாளை மறுதினம் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் ஈடுபடும் பள்ளி மாணவ, மாணவிகளின் ஒத்திகையும், ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.* ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கு, சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் மூன்று போலீசாருக்கும், கல்வித்துறையில் இருவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை