உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் ரயில் நின்று செல்ல அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

கொடுமுடியில் ரயில் நின்று செல்ல அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

ஈரோடு : மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்-ணவிடம், ஈரோடு எம்.பி., பிரகாஷ் கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கொடு-முடி மகுடேஸ்வரர் கோவில், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த புனித ஸ்தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தென்னக ரயில்வே சார்பில் கோவை-மயிலாடுதுறை இரு மார்க்கத்தில் ஜன-சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இரு ரயில்-களும் கொடுமுடி வழியாக செல்வதால், இவ்வி-டத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, ஈரோடு-சென்னை சென்ட்ரல் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ஏற்-காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலில் அதி-காலை, 3:40 மணிக்கு சென்றடைகிறது. அதிகா-லையில் சென்னை சென்ட்ரலில் இருந்து வெளியே வந்து பிற இடம் செல்வதில் பிரச்னை எழுகிறது. எனவே ஈரோட்டில் இருந்து இரவு, 10:00 மணிக்கு ரயில் புறப்பட்டால், பயணிகளுக்கு பயனுடையதாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை