உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

கரூர்: கரூர், ஐ.டி.ஐ.,யில், மாணவர் நேரடி சேர்க்கைக்கு ஜூலை, 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:கரூர் தொழிற்பயிற்சி நிலையத்தில், மகளிருக்கு மட்டும் தையல் தொழில்நுட்ப பயிற்சி, கணினி தொழில்நுட்ப பயிற்சி ஓராண்டு காலத்துக்கும், இருபாலருக்கும் மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு ஓராண்டு படிப்பும், ஆப்ரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் படிப்பு இரண்டு ஆண்டு படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், சைக்கிள், வரைபடக் கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணிகள் அரசால் வழங்கப்படும். இங்கு, நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. ஜூலை, 31க்குள் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் விபரங்களை, கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி 04324- 222111, 9499055711 வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை