உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரி ஆற்றின் நடுவில் தத்தளித்த மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு

காவிரி ஆற்றின் நடுவில் தத்தளித்த மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு

பவானி: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த உத்தமன் மகன் பெருமாள், 35; பெற்றோரை இழந்த நிலையில், மனநலம் பாதித்து சுற்றி திரிந்து வருகிறார். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்தவரை அப்பகுதியினர் அடித்து விரட்டி-யுள்ளனர். இதனால் பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகே காவிரி நீரேற்று நிலையம் பின்புறம், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் சென்று படுத்திருந்தார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை, 8,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பாறையை வெள்ளம் சூழ்ந்ததால், வெளியேற முடி-யாமல் விடிய விடிய தவித்து வந்தார். இதைப்பார்த்த மக்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று தகவல் தெரிவித்-தனர். பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலை-மையிலான தீயணைப்பு வீரர்கள் பரிசலில் சென்றனர். பெருமா-ளுக்கு பாதுகாப்பு உபகரணம் அணிவித்து கரைக்கு மீட்டு வந்-தனர். பசியால் தவித்த பெருமாளுக்கு உணவு வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை