உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தளவாய்பேட்டையில் இன்று பொங்கல் விழா

தளவாய்பேட்டையில் இன்று பொங்கல் விழா

ஈரோடு:தளவாய்பேட்டை, பூங்குழலி பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று காலை பொங்கல் வைபவம், சக்தி அழைத்தல் நடக்கிறது. மதியம் மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல் நடக்கிறது. மாலையில் மாவிளக்கு பூஜை, மஹா தீபாராதனை நடக்கிறது. நாளை காலை பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்குதலும், மாலையில் சின்ன மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்குதலும் நடக்கிறது. 3ம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி நகர் வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை