உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.5.66 லட்சம் பறிமுதல்

ரூ.5.66 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலம்;நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், குளத்து பிரிவில், பறக்கும் படை அலுவலர்கள், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கோவையிலிருந்து கர்நாடகா சென்ஹ ஒரு ஈச்சர் வேனில், அருண்குமார் என்பவரிடம், 5.66 லட்சம் ரூபாய இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.ஆப்பக்கூடலில்...பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆப்பக்கூடல் நால்ரோட்டில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பல்சர் பைக்கில் வந்த, வேம்பத்தி கூலிவலசை சேர்ந்த சந்தோஷ்குமாரிடம், 1.12 லட்சம் ரூபாய் இருந்தது. மகளிர் குழுவில் வசூலித்து கொண்டு செல்வதாக கூறினார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை