உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் படையினர் வாகனம் விபத்தில் சிக்கி 6 பேர் காயம்

தேர்தல் படையினர் வாகனம் விபத்தில் சிக்கி 6 பேர் காயம்

பவானி:ஈரோடு மாவட்டம் பவானியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஈரோடு ஆவின் தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் பழனிச்சாமி, நசியனுார் டிராபிக் எஸ்.எஸ்.ஐ., கார்த்திகேயன், பவானி டிராபிக் தலைமை காவலர் செல்வக்குமார், பெண் போலீஸ் தேவி, பவானி செங்காட்டை சேர்ந்த கேமராமேன் தீனா குழுவினர் இதில் இருந்தனர். ஷைலோ காரை உரிமையாளர் சச்சிதானந்தம் ஓட்டினார். பவானி- மேட்டூர் ரோட்டில் சன்னியாசிப்பட்டி ரைஸ் மில் மேடு அருகே, 11:30 மணிக்கு கார் சென்றது. அப்போது எதிரே மோதுவது போல் வந்த லாரியால் அதிர்ச்சியடைந்து, இடது பக்கம் வாகனத்தை ஒடித்தார். இதில் நிலை தடுமாறிய கார், சாலையோர புளிய மரத்தில் மோதியது. காரில் பயணித்த ஆறு பேரும் காயமடைந்தனர்.டிராபிக் ஏட்டு செல்வக்குமார், பெண் போலீஸ் தேவி, நசியனுார் தனியார் மருத்துவமனையிலும், ஆவின் அலுவலர் பழனிச்சாமி, கேமராமேன் தீனா பவானி அரசு மருத்துவமனையிலும், எஸ்.எஸ்.ஐ., கார்த்திகேயன், டிரைவர் சச்சிதானந்தம் பவானியில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை