உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு லோக்சபாவில் 70.59 சதவீத ஓட்டுப்பதிவு கடந்த தேர்தலைவிட 2.52 சதவீதம் குறைவு

ஈரோடு லோக்சபாவில் 70.59 சதவீத ஓட்டுப்பதிவு கடந்த தேர்தலைவிட 2.52 சதவீதம் குறைவு

ஈரோடு : ஈரோடு லோக்சபா தேர்தலில், 70.59 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. ஈரோடு லோக்சபா தேர்தலில், கடந்த, 19 ல் நடந்த ஓட்டுப்பதிவு முடிந்து, நேற்று இரவு, 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு விபரங்களை இறுதி செய்தனர். இதன்படி, 70.59 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்தது.இதில் ஈரோடு மேற்கு தொகுதியில், 65.72 சதவீதம் என மிகக்குறைவாகவும், ஈரோடு கிழக்கில், 66.05 சதவீதம் என அதனை ஒட்டியும் ஓட்டுப்பதிவானது. ஆனால், மொடக்குறிச்சி தொகுதியில், 76.27 சதவீதம் என அதிகமாக ஓட்டுப்பதிவானது.ஈரோடு லோக்சபா தொகுதி அளவில் ஆண்களைவிட பெண்கள், 22,422 பேர் கூடுதலாக ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவில், 71.42 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்ததாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தனர். நேற்று அனைத்து ஓட்டுச்சாவடிகளின் ஓட்டுக்களையும் இறுதி செய்தபோது, 70.59 சதவீதம் என ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல கடந்த, 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 73.11 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்தது. தற்போதைய தேர்தலில், 2.52 சதவீத ஓட்டுக்கள் குறைவாக பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை