உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாயை பிரிந்து தனியே தவிக்கும் குட்டி யானை

தாயை பிரிந்து தனியே தவிக்கும் குட்டி யானை

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி செல்லும் வழியில், புதுக்குய்யனுார் அருகில் கடந்த ஏப்., 11ல், 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. வனத்துறையினர் யானைக்கு சிகிச்சையளித்தனர். யானை அருகில், 3 வயது குட்டி யானை தவித்து கொண்டிருந்தது. மறுநாள், பெண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.அந்த குட்டி யானையை, மற்ற யானைகளோடு சேர்த்து விட்டனர். ஆனால், அந்த குட்டி யானையை மற்ற யானைகள் சேர்க்காமல் துரத்தின. குட்டி யானை தொடர்ந்து, கடந்த இரு மாதமாக பண்ணாரி சாலையில் மாலை நேரத்தில் சாலையை கடந்து, அங்கும் இங்கும் உலவி கொண்டிருந்தது.இதை பார்த்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து விரட்டி வந்தனர். தாய் யானையை பிரிந்து, உணவு கிடைக்காமல் மிகவும் தளர்ந்த நிலையில், குட்டி யானை உலா வருவது, மிகவும் பரிதாபமாக உள்ளது.எனவே, குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு, முதுமலை யானை முகாமிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை