உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், நகை திருட்டு 

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், நகை திருட்டு 

ஈரோடு: ஈரோடு, நாடார் மேடு, அண்ணாதுரை வீதியைச் சேர்ந்தவர் பர்கத் பாவா, 28, ஜவுளி வியாபாரி. வாடகை வீட்டில் மனைவி, மகனுடன் வசிக்கிறார். ஜூன், 2ல் பர்கத் பாவா குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன் தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டு முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 3.5 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருட்டுப் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் அவர் புகார் அளித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை