உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு டவுன் பஞ்., கவுன்சிலர் மனு

நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு டவுன் பஞ்., கவுன்சிலர் மனு

ஈரோடு: பெருந்துறை டவுன் பஞ்., 2வது வார்டு கவுன்சிலர் பஷிரியா பேகம் (காங்.,), கலெக்டர் அலுவலகத்துக்கு தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் நேற்று வந்தார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா-விடம் மனு வழங்கி கூறியதாவது:பெருந்துறை பேரூராட்சியின் எட்டாவது வார்டு பகுதியில், செங்-குந்தர் சமுதாயத்துக்கான பாவடி நிலத்தை நான் அபகரிப்பதாக, சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர். அவ்வாறு நான் ஈடுபடாத நிலையில், என் மீது தவறாக குற்றம் சாட்டுகின்-றனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை