உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

சத்தியமங்கலம்;தாளவாடி அருகே ராமாபுரம் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய நான்கு யானைகள், அப்பகுதியில் மல்லு என்பவரின் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தன. நேற்று மாலை வரை வெளியேறவில்லை. மொத்தம், 6 ஏக்கர் பரப்பிலான கரும்பில், ௨ ஏக்கர் கரும்பை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு, 7.30 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்றன. யானையை விரட்டும் பணியை வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் வெகுநேரம் பரபரப்பு நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை