உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்

காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி, 24வது வார்டுக்கு உட்பட்ட கிருஷணம்பாளையம் ஜீவா நகரில், 26ம் தேதி சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்-பட்டிருந்தது. சாலை அமைக்கும் பணிக்காக வந்த ஊழியர்கள், காரின் உரிமையாளரை தேடினர். அவர் கிடைக்காததால், வேறு வழியின்றி காரை அகற்றாமல் சாலை அமைத்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாலை அமைக்கும் பணி தொடர்பாக, முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், அந்த காரை அகற்றியிருக்கலாம். ஆனால், இரவில் சாலை அமைக்க வந்தனர். உரிமையாளர் தெரியாததால், காரை அகற்-றாமல் சாலை அமைத்து சென்றுள்ளனர். மாநகராட்சியில் பல பணிகள் இந்த லட்சணத்தில்தான் நடக்கிறது. அரசு நிர்வாகத்தை எப்படித்தான் பாராட்டுவதோ! தெரியவில்லை. இவ்வாறு மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை