உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏரியில் மண் அள்ள அனுமதிக்காததால் மறியல்

ஏரியில் மண் அள்ள அனுமதிக்காததால் மறியல்

பவானி : குருவரெட்டியூரை அடுத்த கரடிப்பட்டியூர் ஏரியி-லிருந்து, விவசாயிகளுக்கு வண்டல் மண் மற்றும் மண் அள்ள, மாவட்ட நிர்வாகம் அனும-தியளித்தது. அந்தியூர் தாசில்தாரிடம் விண்ணப்-பித்து, அனுமதி பெற்ற விவசாயிகள், கரடிப்பட்-டியூர் ஏரிக்கு டிராக்டர், டிப்பர் லாரிகளில் சென்று நேற்று மண் அள்ளினர். சிறிது நேரத்தில் மண் அள்ள அனுமதியில்லை என்று டிரிப் ஷீட் வழங்-குவதை நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரம-டைந்த விவசாயிகள், அந்தியூர்-கொளத்துார் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, டிராக்டரில் மட்டும் மண் எடுத்து செல்ல அனுமதித்தனர். சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை