உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மதுபாட்டிலில் வீரன் என்ற பெயரை நீக்க கோரிக்கை

மதுபாட்டிலில் வீரன் என்ற பெயரை நீக்க கோரிக்கை

ஈரோடு: மது பாட்டிலில் 'வீரன்' என்ற பெயரை நீக்க, சமூகநீதி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மதுவிலக்கு ஆயத்துறை தீர்வை அமைச்சர் முத்துசாமியிடம், அக்கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வீரன் என்ற பெயர் உள்ளது. மேலும், சுதந்திர போராட்ட வீரர்கள் ஒண்டி வீரன், மாவீரன் பொல்லான், மதுரை வீரன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் 'வீரன்' பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக டாஸ்மாக் கடைகளில், வீரன் என்ற பெயரில் மது விற்பனை செய்யப்படுகிறது.இது பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீரன் என்ற பெயரில் உள்ள மதுபாட்டில்களை கொள்முதல் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை செய்யக்கோரி, அனைத்து அமைப்புகளும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.எனவே மது பாட்டிலில் வீரன் என்கிற பெயரை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை