உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்

மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்

ஈரோடு:ஈரோட்டில் வெயில் சுட்டெரிப்பதோடு, நாளுக்கு நாள் வெயிலின் அளவும் அதிகரித்து வருகிறது. காலை, 8:00 மணி முதலே வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்து, மாலை, 5:00 மணி வரை தாக்கம் குறைவதில்லை. இந்நிலையில் மாநகரில் மூன்று இடங்களில் சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் நிற்கும் இடங்களில், மேற்புரம் பந்தல் அமைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதுபற்றி போலீசார் கூறியதாவது: ஈரோடு கலெக்டர் அலுவலக சிக்னல், ப.செ.பார்க் சிக்னல், காளை மாட்டு சிலை சிக்னல் ெந மூன்று இடங்களில் கோடை பந்தல் அமைக்கப்பட உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏற்கனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை