| ADDED : மே 07, 2024 02:34 AM
காங்கேயம்;திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, முத்துார் பிரிவு, சென்னிமலை ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, பழையகோட்டை ரோடு, அகஸ்திலிங்கம்பாளையம் பிரிவு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்தில், நகரில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட, பல்வேறு விதிகளை மீறியதாக, 539 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக, காங்கேயம் போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.