உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய வழக்கில் கோபியில் இரு ஆசிரியைகள் கைது

ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய வழக்கில் கோபியில் இரு ஆசிரியைகள் கைது

கோபி: ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய வழக்கில், அரசு பள்ளி ஆசிரியை இருவரை, கோபி போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே கரட்டூரை சேர்ந்தவர் பழனிசாமி, 57. இவர் உட்-பட எட்டு பேரிடம், மூன்று பெண்கள் ஏலச்சீட்டு நடத்தி, 1.60 கோடி ரூபாய் பெற்றனர். மேலும் தொகையை திருப்பி கொடுக்-காமல் அவர்கள் ஏமாற்றி வந்ததாக, பழனிசாமி கோபி போலீசில் புகாரளித்தார். அதன்படி, கோபியை சேர்ந்த பிரபா, 47, குளோரி, 60, குடியரசி, 46, என்ற மூன்று பெண்கள் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அவர்களில் பிரபா, குடியரசியை கோபி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குளோரியை தேடி வரு-கின்றனர்.கைதான இரு பெண்களும், கோபியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை எனவும், தலைமறைவாக உள்ள குளோரி என்பவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை எனவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை