உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கள ஆய்வுக்கு வராமல் நீர்வளத்துறை அதிகாரிகள் டிமிக்கி

கள ஆய்வுக்கு வராமல் நீர்வளத்துறை அதிகாரிகள் டிமிக்கி

பவானி, பவானி யூனியன் குருப்பநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து வர்ணபுரத்தில், மேட்டூர் அணை வலதுகரை வாய்க்கால் செல்கிறது. இந்த இடத்தில் தனி நபர் ஒருவர் கரையை ஆக்கிரமித்து கோவில் கட்டியுள்ளார். இதில்லாமல் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வாய்க்கால் குறுகி விட்டது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்ய, பவானி நீர்வளத்துறை அதிகாரிகள், நேற்று வருவதாக கூறியிருந்தனர். அதிகாரிகளை எதிர்பார்த்து வர்ணபுரம், செங்காடு வாய்க்கால் பகுதியில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.இதுகுறித்துமேட்டூர் வாய்க்கால் பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: மேட்டூர் பாசன வாய்க்காலால், 2,௦௦௦ ஏக்கர் நிலம் இப்பகுதியில் பாசனம் பெறுகிறது. வாய்க்கால் கடைமடை பகுதியில் கழிவுநீர் செல்ல கான்கிரீட் கால்வாயாக கட்டப்பட்டுள்ளது. ஆனால், வாட்டம் இல்லாததால், வாய்க்காலில் கழிவுநீர் உட்புகுந்து வருகிறது. தற்போது வாய்க்கால் கரை பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவர்களும் வருவதாக கூறியிருந்தனர். ஆனால், வரவில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை