உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,600 டன் புழுங்கல் அரிசி ஈரோடு வந்தது

2,600 டன் புழுங்கல் அரிசி ஈரோடு வந்தது

ஈரோடு: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு, 2,600 டன் புழுங்கல் அரிசி வந்தது.தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் மக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு வினியோகிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தெலுங்கானா மாநிலம் சேரளபள்ளியில், புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக, 2,600 டன் அரிசி, 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில், நேற்று ஈரோடு கூட்ஸ்ஷெட்டுக்கு வந்தது. சுமை துாக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கி, நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை