உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு விருது

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு விருது

பெருந்துறை, கூட்டுறவுத்துறை சார்பில் பெருந்துறையில், 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று நடந்தது. இதில், 3,520 பயனாளிகளுக்கு, 44 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டது. வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கடனுதவி வழங்கி பேசினார். இதை தொடர்ந்து கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்பட்ட சங்கங்கள், பணியாளர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவையொட்டி பல்வேறு போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். முன்னதாக அமைச்சர் கூட்டுறவு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை, அமைச்சர் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை