உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நள்ளிரவில் போலீசாருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பகீர்

நள்ளிரவில் போலீசாருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பகீர்

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று நள்ளிரவு, 2:15 மணிக்கு தொலைபேசியில் (லேண்ட் லைன்) அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, 'அந்தியூர், செம்புளிச்சாம்பாளையத்தில் கபடி போட்டி நடக்கும் இடத்தில், வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விரைவில் வெடிக்கும். தான் தற்போது மஹாராஷ்டிராவில் இருக்கிறேன். நான், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் நவீன். நானும் கபடி வீரர்தான். 3 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை. இறுதியாக உங்களுக்கு போன் செய்தேன். நீங்கள் தான் போனை எடுத்துள்ளீர்கள்' என்று பேசியுள்ளார். நடுவில் போலீசாரை தகாத வார்த்தையிலும் பேசியுள்ளார். ஆனாலும், தகவலை கேட்ட போலீசாருக்கு துாக்கம் கலைந்தது. உடனடியாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சோதனை செய்ய அறிவுறுத்தினர். இதில் தகவல் வெடிகுண்டு புரளி என்பது உறுதியாகவே, போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதேசமயம் வெடிகுண்டு விடுத்த நபர் தனது இ-மெயில் முகவரியையும் தெரிவித்துள்ளார். இதனால் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை