ஈரோடு:ஈரோட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், உள்ளூர் திட்டகுழுமம் சார்பில் இணக்கமளிக்கப்பட்ட, 'ஈரோடு முழுமை திட்டம்' குறித்த ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் கோருதல் தொடர்பான அரசு அலுவலர்கள், உள்ளாட்சி, டவுன் பஞ்., மற்றும் மாநகராட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனான குழுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு முழுமை திட்டமானது, 731.0 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு, 1 மாநகராட்சி, 109 கிராமங்கள் உள்ளடக்கிய விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசால் இணக்கமளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் தொடர்பான ஆட்சேபனைகள், ஆலோசனைகள் பெற, இணைய தள சேவை துவங்கப்பட்டு, திட்டம் மீதான ஆட்சேபனைகள், ஆலோசனைகளை, gmail.comஎன்ற மின்னஞ்சள் மூலம், https://erodedtcp.in என்ற வலைதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வலை தளத்தில், ஈரோடு முழுமை திட்டத்தில் அமையும் கிராமங்களின் பட்டியல், வரைபடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் Erode LPA என்ற பேஸ்புக் மற்றும் Erode--lpa என்ற இன்ஸ்டாகிராம் அடையாள பெயரிலும் தகவல் உள்ளன.பொதுமக்கள் தங்கள் ஆலோசனை, ஆட்சேபனைகளை, 60 நாட்களுக்குள் தெரிவிக்க யோசனை தெரிவித்துள்ளனர்.மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.