உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செஸ் வரியை நீக்க வணிக சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்

செஸ் வரியை நீக்க வணிக சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்

ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:தமிழ்நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டிருந்த பூரண செஸ் அறிவிப்பு மட்டுமே கடந்த, 2022ல் ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக மாவட்ட அளவில் பட்டியலிடப்பட்டு, வணிகர்கள் செலுத்தி வரும் வேளாண் விளை பொருள் செஸ் வரி தற்போதும் அமலில் உள்ளது. ஈரோடு விற்பனைக்குழு விதிமுறையின்படி, மஞ்சளுக்கு ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மஞ்சள் பட்டியலிடப்படவில்லை. இதனால், இதர மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படும் மஞ்சள் உள்ளிட்ட வேளாண் விளைபொருளுக்கு ஒரு சில மாவட்ட வணிகர்கள் மட்டும் கூடுதலாக செஸ் வரி செலுத்தி வருகின்றனர்.இது வர்த்தக ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, ஒரு மாநிலத்தில் செஸ் வரி செலுத்தப்பட்டிருந்தால், அந்த வரி தமிழ்நாட்டிலும் வசூல் செய்யப்பட்டால், இங்கு உணவு உற்பத்தி தொழில் பாதிப்படைகிறது. எனவே தமிழ்நாடு அரசு, நம் மாநிலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வசூலிக்கும் செஸ் வரியை (சர்வீஸ் சார்ஜ்) முற்றிலும் நீக்க ஆவண செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை