உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரும்பு ஆங்கிள் விழுந்து கட்டட தொழிலாளி பலி

இரும்பு ஆங்கிள் விழுந்து கட்டட தொழிலாளி பலி

கோபி:கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 40, கட்டட தொழிலாளி; கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள கம்பெனியில் நேற்று மதியம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு ஆங்கிள் எதிர்பாராதவிதமாக விழுந்ததில், சிவக்குமார் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !