உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி-சத்தி சாலையில் விரிவாக்கப்பணி மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரம்

கோபி-சத்தி சாலையில் விரிவாக்கப்பணி மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரம்

கோபி: கோபி-சத்தி சாலையில், மூலவாய்க்கால் முதல், சிங்கிரிபாளையம் வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. அத்துடன் வாய்க்கால்மேடு, காசிபாளையம், சிங்கிரிபாளையம், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதியில், சிறு கல்வெட்டு பாலம், கட்டமைப்பு பணி, ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் அப்பகுதிகளில், வாகனங்கள் சீராக செல்ல வழியின்றி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்கப்பணிக்காக, மூலவாய்க்கால் முதல், சிங்கிரிபாளையம் வரை, சாலையோரமுள்ள, 170 புளிய மரங்களை, வெட்டி அகற்றும் பணி துவங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக, சிங்கிரிபாளையம், காசிபாளையம் பகுதிகளில், பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில் இதுவரை, 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மரங்களை வெட்டி அகற்றிய பின், 15.50 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ