உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷனில் தே.எண்ணெய் விற்பனை முதல்வரிடம் விவசாயிகள் முறையீடு

ரேஷனில் தே.எண்ணெய் விற்பனை முதல்வரிடம் விவசாயிகள் முறையீடு

ஈரோடு:ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனை செய்வதற்கு பதில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலர் சுப்பு மனு அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியாலும், நாபெட் நிறுவனத்தில் கொள்கையற்ற கொள்முதலாலும், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு விவசாயிகள் நிலை இவ்வாறு இருக்க, பாமாயிலை இறக்குமதி செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது நியாயமற்றது. அதிலும், உடல் நலனுக்கு பாமாயில் உகந்தது அல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இருந்தும் மானிய விலை கொடுத்து, பாமாயிலை இறக்குமதி செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது ஏற்படையதல்ல.இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயிலை லிட்டர், 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, மானியத்துடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு லிட்டர், 25 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்க வேண்டும். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.தேங்காய் எண்ணெய் வாங்கினால், 22 மாவட்டங்களில் உள்ள, 20 லட்சம் தென்னை விவசாயிகள் பயன் பெறுவர். சாகுபடி செலவை ஈடுசெய்ய முடியாமல் தவிக்கும் நிலக்கடலை விவசாயிகள் நிலை உயரும். எனவே, இது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை