உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆதி திராவிடர் மாணவர் விடுதி கட்ட அடிக்கல்

ஆதி திராவிடர் மாணவர் விடுதி கட்ட அடிக்கல்

தாராபுரம்,:தாராபுரத்தில், காமராஜபுரத்தில் செயல்பட்டு வந்த ஆதிதிராவிட மாணவர் விடுதி, உரிய பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் புதிய கட்டடம் கட்ட, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இது தொடர்பாக தமிழக அரசு கேட்டுக் கொண்டதன்படி, புது கட்டடம் கட்ட, 1.50 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்நிலையில் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, நேற்று காணொலி காட்சியில், மத்திய அமைச்சர் வீரேந்திரகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாட்கோ கோவை மண்டல செயற்பொறியாளர் சரஸ்வதி, துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை