| ADDED : டிச 05, 2025 10:07 AM
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் கண்ணையன் வீதியில், ஈரோடு நாடார் முன்னேற்ற சங்கம் செயல்படுகிறது. இதன் தலைவராக பலராமன், செயலாளராக ஜெயராஜ், கணக்காளராக ராஜேந்திரன் உள்ளனர். சங்கத்தில், 50க்கும் மேற்பட்ட உறுப்பினர் இருப்பதாக கூறப்படுகி-றது. இதில் ராஜேந்திரன் ஏலச்சீட்டு நடத்தி-யுள்ளார். திருநகர் காலனி மற்றும் அதை சுற்றி-யுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் பணம் செலுத்-தியுள்ளனர். ஏலம் முடிந்தும் பணம் திருப்பி கொடுக்க-வில்லை. இதுகுறித்து ராஜேந்திரன் முறையான பதில் கூறவில்லை. மாறாக கடந்த மாதம், 17ல் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்டோரிடம் ஏல சீட்-டுக்கு பணம் செலுத்தியவர்கள் பணம் குறித்து கேட்டும் முறையான பதில் இல்லை. இந்நிலையில் ராஜேந்திரனிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறி, 20க்கும் மேற்பட்டோர் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகாரளிக்க நேற்று மாலை சென்றனர். ஆனால், உரிய ஆவணம் கொண்டு செல்லாததால் முறையாக மனு எழுதி வருமாறு கூறவே, திரும்பி சென்றனர்.