உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலி பாட்டிலை கொடுத்து ரூ.10 பெறுங்கள் அனைத்து மது கடைகளிலும் இன்று முதல் அமல்

காலி பாட்டிலை கொடுத்து ரூ.10 பெறுங்கள் அனைத்து மது கடைகளிலும் இன்று முதல் அமல்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடை, 182 செயல்படுகிறது. மலை பிரதேச பகுதியில் இயங்கும் மூன்று கடைகளில், விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் அருந்திய பின், காலி பாட்டில்களை அதே கடையில் திரும்ப பெற்று கொள்ளும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் அமலில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீதி, 179 கடைகளிலும் இன்று முதல் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.இன்று முதல் அனைத்து வகை மது, பீர் வகைகளுக்கு சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யும்போது அதிகபட்ச விற்பனை விலையுடன், 10 ரூபாய் கூடுதலாக பெறப்படும்.அதற்கான கடை எண் குறிப்பிட்டு 'ஈ.சி., ரூ.10' என அச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அந்த வகை மதுபானங்களின் காலி பாட்டில்களை ஏற்கனவே வாங்கிய கடைகளில் ஸ்டிக்கரோடு திரும்ப ஒப்படைக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு, 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.காலி பாட்டில்களை நீர் நிலை, பொது வெளியில் துாக்கி வீசாமல், சம்மந்தப்பட்ட கடைகளில் திரும்ப ஒப்படைத்து, 10 ரூபாயை திரும்ப பெறலாம். இதை செய்திக்குறிப்பில் கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை