உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாலுகா ஆபீசில் குப்பையில் கிடந்த அரசின் இலவச வேட்டி, சேலை

தாலுகா ஆபீசில் குப்பையில் கிடந்த அரசின் இலவச வேட்டி, சேலை

ஈரோடு: தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவசமாக வேஷ்டி, சேலை வழங்குகிறது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்புடன் பெரும்பாலும் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படவில்லை என்று, மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஈரோடு தாலுகா அலுவலக வளாக காத்திருப்பு அறையில் இலவச வேஷ்டி, சேலை பண்டல் குவியல், குவியலாக குவிந்து கிடக்கிறது. நடப்பாண்டுக்குரிய வேட்டி-சேலையாக தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டு மீதியானதாக இருக்கலாம். அல்லது வழங்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்ட நிலையில், குப்பை பொருட்களுடன் சேர்த்து வீசப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. தாலுகா அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை