| ADDED : மே 09, 2024 06:23 AM
டி.என்.பாளையம் : டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகரை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அபிராமி, 28. இவர் வாணிப்புத்துார் பள்ளத்துமேடு பழனிசாமி என்பவரது மகன் ரமேஷ், 26, என்பவருடன் பூக்கள் வாங்க, சத்தியமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் கடந்த, 6ம் இரவு, 9:30 மணிக்கு மேல் சென்றுள்ளனர்.ஏளூர் டைரி பார்ம் அருகே சென்றபோது, எதிரே கோபி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., ஜெயராத், 45, ஓட்டி வந்த கார், ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் அபிராமி, ரமேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் மீட்கப்பட்டு, சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அபிராமி கொடுத்த புகார்படி, எஸ்.ஐ., ஜெயராத் மீது, பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.