உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வெள்ளகோவில் : வெள்ளகோவில், உப்பு பாளையத்தில் பொய்யாமொழி விநாயகர் மற்றும் மலையம்மன் கோவிலில் திருப்பணி நடந்தது. கும்பாபிஷேக நிகழ்வு கடந்த, 25ம் தேதி காலை தொடங்கியது. அதை தொடர்ந்து யாக பூஜை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, பொய்யாமொழி விநாயகர் கோபுர கும்பாபிஷேகம், பொய்யாமொழி விநாயகர் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு மலையம்மன் கோவில் விமான கோபுர கும்பாபிஷேகம், மூலவர் மகா கும்பாபிஷகமும் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி