| ADDED : மார் 12, 2024 04:47 AM
ஈரோடு: ஈரோடு நந்தா இன்ஜினீயரிங் கல்லுாரியின், 18-வது பட்டமளிப்பு விழா, நந்தா தொழில் - நுட்ப கல்லுாரியின், 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார்.கல்லுாரி செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.நந்தா இன்ஜினீயரிங் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால், கல்லுாரி ஆண்டறிக்கையை வாசித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், மாணவ-, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். விழாவில் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் நிறுவன மனித வளத்துறை தலைவர் அஸ்வதி வேணுகோபால் பேசினார். இன்ஜினீயரிங் கல்லுாரி தரவரிசையில் இடம்பெற்ற, 36 பேர் உள்பட இளங்கலையில், 594 பேர்; முதுகலையில், 106 பேர் என, 700 பேர்; தொழில் நுட்ப கல்லுாரி தரவரிசையில் இடம் பெற்ற ஆறு பேர் உள்பட இளங்கலையில், 188 பேர் பட்டம் பெற்றனர்.